Calendar Date

Sep
06
2010
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

 நெற்றிக்கண் ஆசிரியர் ஏ.எஸ்.மணி கைது : மனித உரிமை ஆணையத்திடம் புகார்       இராமநாதபுரம் : குழந்தைகளைக் கடத்தும் கும்பல் : கீழக்கரையில் மக்கள்...       காஷ்மீர் பிரச்சினை தீர்வு-யாரிடம் வேண்டுமானலும் பேசத் தயார் : ப.சி...       தர்மபுரி பஸ் எரிப்பு-3 குற்றவாளிகளின் மரணதண்டனை உறுதி : உச்ச நீதிமன...       துபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிக‌ழ்வில் வேலூர் எம்.பி. ப‌ங்கேற்...       முகமது ஆசிஃப்பின் காதலி வீணா மாலிக் சூதாட்டத்தில் பங்கு:ஐ.சி.சி. வி...       பிரிட்டனில் இந்திய நடிகை அர்ச்சி பஞ்சபி-க்கு எம்மி விருது       தவறான உணவுப்பழக்கத்தால் தள்ளாடும் இந்தியர் நசீர் அகமது அப்துல் ர...       பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்கம் : நாள் : 07-09-2010 மாலை 6 மணி       "எழிலரசி" - அன்னை தெரசா வாழி : டாக்டர்.எழில்வேந்தன்       கீழக்கரை:புறாக்கள் கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொறிக்கும் ...       செம்மொழி மாநாட்டில் ஐம்பெரு நாட்கள்-நேரடி அனுபவங்கள்:பேரா.பெஞ்சம...       பள்ளிவாசல் கட்ட போலி தெய்வங்களுக்கு பூஜை : காரைக்காலில் நடந்த கொட...       பிளாக்பெர்ரி செல்போன் சேவை இந்தியாவில் நிறுத்தப்படுமா? : சச்சின் ...       சுகாதாரப்பாதுகாப்பு அறநலத்திட்டங்கள்:அமெரிக்க மருத்துவர்கள் மா...       நீச்சல் வீரர் பாலகிருஷ்ணன் தாக்குதல் : போட்டி பங்கேற்பை தடுக்க சதி      

சிறப்புக்கட்டுரை

article thumbnailகணினியில் வளரும் ஆதித்தாயின் காடுகள் : திலகபாமா

Friday, 03 September 2010

கணினியில் வளரும் ஆதித்தாயின்...
+ Full Story

இருட்டின் குழந்தை - 1 : மா.சுரேஷ் PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
on 30-12-2008 00:18

Favoured : 20

Published in : இலக்கியம், தொடர்

நீண்ட நேரமாக தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவனைக் கவனித்த சங்கப்பிள்ளை 'என்னா  வேணும்என்று கேட்டதும் அவன் அழுத்தமாய் 'ர்ர்ரத்தம் ' என்றான். பதிலுக்கு சங்கப்பிள்ளையும் அவனை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு தர்றேன் என்பதாய்த் தலையாட்டினார்.Image 

'இங்க ஒரு ஒன்ர கிலோ!  சொல்லி அர மணி நேரமாச்சி' சலிப்போடு சொன்னது ஒரு குரல்.


'தலக்கறி ஒரு முக்கால் கிலோ போடுப்பாஎன்றது இன்னொரு குரல். 

மிதிவண்டியில் வந்த ஒருவர் வண்டியிலிருந்து இறங்காமல் காலூன்றி நின்றுகொண்டே


ஈரல் இருக்கா ...?”
ஈரல் ஆயிப்போச்சிகொடலு வேணும்னா இருக்கு


சொல்லிக்கொண்டே பிறை போல் உள்நோக்கி வளைந்திருந்த கத்தியால் கடகடவென மாட்டின் நெஞ்செலும்புகளைத் துண்டாக்கிக் கொண்டிருந்தார்.  மனைவி கறியை நிறுத்துப் போடுவதும் காசு வாங்குவதாகவும் இருந்தாள்.  கடையில் கூட்டம் அலை மோதியது.  சங்கப்பிள்ளை எப்பொழுதும் இளம் கன்றுகளைத்தான் கறி போடுவார்.  அதனாலேயே கடையில் கூட்டமாக இருக்கும்.  இன்று ஞாயிற்றுக்கிழமை வேறு சொல்லவே வேண்டாம்.

 

நல்ல கொழுத்த  கன்றாய்  இருக்கக்கூடும்.  இரத்தம் காயாமல் தொங்கிக்கொண்டிருந்த இரண்டு சப்பைகளும் பருத்துப் பெரியதாய் இருந்தன.  மணிமாறனும் கால்மணி நேரமாய் காகிலோ காகிலோ என சொல்லிக் கொண்டிருந்தான்.  இப்பொழுதுதான் கறிக் கடைக்காரனுக்கு கேட்டிருக்கும்போல;


'ஏண்டா...  செல்லம்மா மவனே காகிலோ போதுமாடா...'


'போதும்.  எனக்கும் எங்க அக்காவுக்கும் மட்டுந்தான்.  எங்கம்மா கறியெல்லாம் திங்காது'   வெள்ளந்தியாய்ச்   சொன்னான்.


அரைக்கிலோ  ஒருகிலோ என்னும் சலசலப்புகளுக்கு ஊடாக கறியை வெட்டிக்கொண்டே,


'ஏண்டா... ஒங்கம்மா சாராயமெல்லாம் குடிக்கிது.  கறி மட்டும் திங்காதாக்கும்ஆமா... சாராயத்துக்கு என்னத்தத் தொட்டுக்கும்மா....சங்கப்பிள்ளை சிரித்துக் கொண்டே கேட்டான். கறிவாங்க நின்று கொண்டிருந்தவர்களும்   கலுக்கென   சிரித்துவிட்டார்கள்.  அவர்களின் சிரிப்பு மணிமாறனை காயப்படுத்தியது. முகம் சுருங்கி சிறுத்தது.  கறியை வாங்கிக் கொண்டு இறுகிய முகத்துடன் வீட்டை நோக்கி  விருவிருவென நடந்தான்.


செல்லம்மா சேலையை முழங்கால் வரைக்கும் சுருட்டி கால்களை அகற்றி நீட்டிக்கொண்டுகூரையை ஒட்டியிருந்த அம்மியில் மிளகாய் அரைத்துக் கொண்டிருந்தாள்.  விறகுக் கட்டைகளைப் போலவே அவளது கால்கள்  கறுத்துக்  கிடந்தன.  வேகமாக வந்த மணிமாறன் விருட்டென வீட்டுக்குள் நுழைந்தான்.  நுழைந்த வேகத்தில் மூங்கில்  குச்சியில்  இடித்துக் கொண்டவன் 'அம்மா...என்று சத்தமிட்டவாறே தலையைத் தேய்த்துக்கொண்டான்.   மணிமாறனின் சத்தம் கேட்டுத் திரும்பிய செல்லம்மா.


'பார்த்து மெல்ல போமாட்ட...  வாசப்படியில குனிஞ்சி போன்னு எத்தன தடவ சொன்னாலும் ஒனக்கு ஏறாது.  பொடச்சுக்கப் போவுது தலையை  தேச்சிவுடு'


மணிமாறன் அம்மா சொன்னதைக் கேட்டும் கேட்காதவனாகத்  தலையைத் தேய்த்துக்கொண்டே வீட்டுனுள் கறியை வைத்தான்.  ஏற்கனவே அவன் முகம்  வாடியிருந்ததைக் கவனித்திருந்த செல்லம்மா,  'மணி...மணி...என இரண்டு முறை கூப்பிட்டதும் எட்டிப் பார்த்தான்.  மணிமாறனைப் பார்த்தவள்,


'யாண்டா... உம்முன்னு இருக்க!  யாங் என்னாச்சி...?


Last update : 30-12-2008 00:26

   
Quote this article in website
Favoured
Print
Send to friend
Related articles
Save this to del.icio.us

Users' Comments  RSS feed comment
 

Average user rating

   (0 vote)

 


Add your comment
Name
E-mail
Title  
 
Comment
 
Available characters: 600
   Notify me of follow-up comments
  Mathguard security question:
B2R         3LW      
O 1    G    O G   BXL
O X   MIX   S J      
B 8    A    6 A   GT4
9TM         EEN      
   
   

No comment posted



mXcomment 1.0.8 © 2007-2010 - visualclinic.fr
License Creative Commons - Some rights reserved
Related news items
Newer news items
Older news items
<< Previous Page                    Next Page>>
< முந்தைய   அடுத்த >
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          

உலகச் செய்திகள்

Newer news items
<< Previous Page          
உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW