|
பக்கம் 1 / 2 சமீப காலமாக நான் சந்திக்க நேர்ந்த இருவேறு சம்பவங்கள் அதிலும் இன்றைய சட்டக் கல்லூரி வன்முறையும் சேர்த்து அதன் உச்சமாக மீண்டும் மீண்டும் வன்முறை குறித்தான சிந்தனைகளை கேள்வி எழுப்புகின்றது. மனதிற்குள் எவ்வளவு வக்கிரமாக வன்முறையை வளர்த்து வைத்திருக்கின்றோம் என்று யோசிக்க பயமாக இருக்கின்றது.
ஒரு தாயாய் இந்த முழு உலகமுமே என் குழந்தைக்கெதிராக வன்முறைக்கான களமாக உருவாகி வருவதாக உணர்கின்றேன்.ஒரு நாள் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். திருமங்கலத்தில் ஏறுபவர் சிவரக்கோட்டைக்கு ஒரு பயணச்சீட்டு கேட்கின்றார். அங்கெல்லாம் நிற்காது விருதுநகர் சிவகாசி மட்டும் ஏறுங்கள் என்கிறார் பரிசோதகர். அப்படித்தான் ஏறுவேன். சிவரக் கோட்டைக்கு டிக்கெட் போடு எதிர்க்குரல்.
படுகொலைகளுக்கு எதிராக உண்ணாவிரதமிருக்கும் நடிகர் விஜய் தன் படத்தில் வன்முறைக் காட்சிகளை இல்லாது செய்து விடுவதாய் அறிக்கை விட முடியுமா? நிறுத்த முடியாது காலை வண்டிக்குள்ளே வைச்சேனா வெட்டிடுவேன், இது நடத்துனர் வெறும் வாய் வார்த்தைகள், சலசலப்புடன் ஓய்ந்து போனது. சிவரக்கோட்டைக்கு டிக்கெட் கேட்டவர் விருதுநகருக்கே டிக்கெட் எடுத்து பேருந்தில் அமர்ந்து விட்டார். வெட்டிப்புடுவேன் எனும் போது சொன்ன வார்த்தைக்கு மறுப்பை அழுத்திச் சொல்லும் பொருளே அன்றி வேறு அர்த்தமில்லை. ஆனால் சொல்லி விட்டு அந்த நடத்துனர் மறந்து விட்ட வார்த்தையை சகிக்க முடியாது உள்ளுக்குள் குமைந்திருக்கின்றார் அந்த நபர். ஊர் நெருங்குவதற்குள் சிலபேருக்கு தொலை பேசி அழைத்திருப்பார் போலும்.
நேரம் போனது பயணத்தில், தொலைக்காட்சியில் சிலரும் வேறு வேறு நினைவுகளோடு சிலரும், கனவுகளோடு சிலரும் இருந்திருக்க சிவரக்கோட்டை பேருந்து நிறுத்தத்திற்கு முன்னே ஒரு பேருந்து வழி மறித்து நிற்க, அதற்குப் பின் நின்றே ஆக வேண்டிய நிர்ப்பந்தம் நான் இருந்திருந்த பேருந்திற்கு. சிவரக் கோட்டைக்கு டிக்கெட் கேட்டவர் ஓடுகின்ற பேருந்திலிருந்து இறங்க முயல, திடீரென மிரட்டும் சலசலப்பு, “இவந்தான் சொன்னது, பெரிய இவனா வெட்டிருவானா? இப்ப வெட்டுடா, இப்பவெட்டுடா சொல்லிக் கொண்டே எலும்புந்தோலுமாய் நின்றிருந்த டிக்கெட் கொடுப்பவரை இழுத்து சரமாரியாக அடிக்கத் துவங்க மொத்த கூட்டமும் உறைந்து நிற்கின்றது. நிறைய பேருக்கு என்ன நடக்கின்றது ஏன் நடக்கின்றது யோசிக்க முடியாததாய் இருக்க இன்னொரு நடத்துனரும் உறைந்து போய் நிற்கின்றார். ஓட்டுநரோ முன் இருந்த கண்ணாடியில் பார்த்தபடி அமைதியாக இருக்கின்றார். அடித்தவர்களோ அடித்தவனுக்கு வலிக்குமே என்ற எண்ணம் ஏதுமின்றி, சமமான பலமில்லாத ஒரு நோஞ்சானே என்ற இரக்கமுமின்றி கசாப்புக் கடை வெட்டலாய் சரமாரியாக அடித்துப் போடுகின்றனர்.
உண்மைகளைச் சொல்லுகின்றேன் என்று தவறுகளை பட்டியலிடுவதை விட, நேர்மையாய் இருந்ததை சொல்லும் உதாரணங்களே இன்றைய நமது தேவை. வந்த 4 அல்லது ஐந்து பேருக்குள் இப்படியொரு வன்மம் மிருகத்தனமான வன்மம் எங்கிருந்து வந்தது. அவர்கள் அடிக்கையில் சுற்றி இருந்த அனைவருக்கும் பயம் அடிவயிற்றைக் கவ்வியது உண்மை. ஆனால் திரைப்படங்களில் சண்டைக் காட்சிகளைப் பார்த்து பார்த்து அதிலும் இதை விட வன்முறைகளெயெல்லாம் யதார்த்தமாய் காண்பிக்கின்றேன் பேர்வழி என்று காண்பித்து காண்பித்து அதை வரவேற்பறையில் சிப்ஸ் கொரித்துக் கொண்டே பார்த்துப் பழகி விட்ட எங்கள் கண்களுக்கு நடந்தேறுகின்ற சம்பவம் சாதாரணாய் பட்டு விடுகின்றதோ?
<< முதல் < முந்தைய 1 2 அடுத்த > கடைசி >> Last update : 15-11-2008 05:25
|
|
|
Users' Comments  |
|
Average user rating
(0 vote)
|
|
Add your comment
|
Very good
By: Iniyavan () on 18-11-2008 01:33