Calendar Date

Sep
03
2010
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

 பிரிட்டனில் இந்திய நடிகை அர்ச்சி பஞ்சபி-க்கு எம்மி விருது       பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்கம் : நாள் : 07-09-2010 மாலை 6 மணி       பிளாக்பெர்ரி செல்போன் சேவை இந்தியாவில் நிறுத்தப்படுமா? : சச்சின் ...       நெற்றிக்கண் ஆசிரியர் ஏ.எஸ்.மணி கைது : மனித உரிமை ஆணையத்திடம் புகார்       முகமது ஆசிஃப்பின் காதலி வீணா மாலிக் சூதாட்டத்தில் பங்கு:ஐ.சி.சி. வி...       துபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிக‌ழ்வில் வேலூர் எம்.பி. ப‌ங்கேற்...       இராமநாதபுரம் : குழந்தைகளைக் கடத்தும் கும்பல் : கீழக்கரையில் மக்கள்...       தவறான உணவுப்பழக்கத்தால் தள்ளாடும் இந்தியர் நசீர் அகமது அப்துல் ர...       செம்மொழி மாநாட்டில் ஐம்பெரு நாட்கள்-நேரடி அனுபவங்கள்:பேரா.பெஞ்சம...       கீழக்கரை:புறாக்கள் கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொறிக்கும் ...       தர்மபுரி பஸ் எரிப்பு-3 குற்றவாளிகளின் மரணதண்டனை உறுதி : உச்ச நீதிமன...       காஷ்மீர் பிரச்சினை தீர்வு-யாரிடம் வேண்டுமானலும் பேசத் தயார் : ப.சி...       பள்ளிவாசல் கட்ட போலி தெய்வங்களுக்கு பூஜை : காரைக்காலில் நடந்த கொட...      

சிறப்புக்கட்டுரை

article thumbnailகணினியில் வளரும் ஆதித்தாயின் காடுகள் : திலகபாமா

Friday, 03 September 2010

கணினியில் வளரும் ஆதித்தாயின்...
+ Full Story

'தமிழம்' பேராசிரியர் பொள்ளாச்சி நசன் நேர்காணல் - ஆல்பர்ட் PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
on 05-09-2008 19:00

Favoured : 57

Published in : நேர்காணல், இலக்கிய பிரபலம்

(9) அதிகாலை : இணையம் பக்கம் உங்கள் பார்வை திரும்பியது எப்போது?

அதுபற்றிக் ​கொஞ்சம் ​சொல்லுங்க​ளேன்!

நசன் : எனது மாணவர் வெற்றிவேல் தனது ஊரில் நடக்கும் விழாவுக்கு அழைத்திருந்தார். அங்குதான் கணினித் தொழில் நுட்ப வல்லுநர் திரு.செந்தில் அவர்களைச் சந்தித்தேன். அவரது இணையதளம் பற்றிக் கூறிய வெற்றிவேல் நீங்களும் இணையதளம் தொடங்கலாமே என்று குறிப்பிட்டார். கையில் வீடியோ படக்கருவியுடன் அங்கிருந்த மாணவர்களைப் படம் எடுத்துக்கொண்டிருந்த செந்திலிடம் பேசினோம். 5 எம்பி இடம் அடுத்தவாரம் உங்களுக்குச் சொந்தம் என்றார். இணையம், 5 எம்பி, html, download, upload எதுவுமே தெரியாத காலம் அது. இணையத்தைப் பார்த்ததுகூடக் கிடையாது.

Imageகோவையில் நடந்த புத்தகக் காட்சிக்குச் சென்று, html தொடர்பான புத்தகம் இருக்கிறதா என்று ​கேட்​டோம். ரூ.250 விலையுள்ள புத்தகத்தைக் காட்டினார் அவர். எனக்கு வேண்டாம் - குறைவான விலையில் உள்ளதா என்று கேட்டேன் - கடைசியில் போய்ப் பாருங்கள் ஒரு புத்தகம் உள்ளது என்றார். கடைசியில் ஒரு புத்தகம் இருந்தது. அது திருநாவுக்கரசு எழுதிய html - பற்றிய புத்தகம். பெரிய புத்தகத்​தை வாங்கியிருந்தால் குழம்பிப் போயிருப்பே​னோ என்ன​வோ!! அன்று இரவு முழுவதும் படித்தேன் புத்தகத்தை முடித்தேன் - 10 வரிகளுக்குள் html செய்வது பற்றிய விளக்கத்தை அடக்கி விடலாம் போலிந்தது. புத்தகத்தைப் படித்து html உருவாக்கினேன். தமிழம் வலையின் முதல் பக்கத்தை நானே வடிவமைத்தேன். இ​ணையத்திற்காகப்

பக்கங்க​ளை வடிவ​மைக்க, கணினித் தொழில் நுட்ப வல்லுநர் ஒருவரிடம் அலைந்து அலைந்து முழுமையாக எதுவும் கிடைக்காததால் ஏற்பட்ட எரிச்சலின் விடிவாகத்தான் அதை வடிவமைத்தேன்.

ஒருவாரம் ஓடியது. செந்திலை பார்க்கக் கிளம்பினோம். கையில் நான் உருவாக்கிய தமிழம் வலை இருந்தது. இது சரியா தவறா எதுவு​மே எனக்குத் தெரியவில்லை. செந்திலும் நானும் ஒரு கணினி மையத்திற்குச் சென்றோம். அங்கே அவர், அவரது இணையதளத்தைக்காட்டினார். அன்றுதான் முதன் முதலாக இணைய தளத்தையே பார்க்கிறேன் நான். பிறகு தமிழம் வலையின் கடவுச் சொல் வந்துவிட்டதா எனத் தன் மின் அஞ்சலில் பார்த்தார்.

"ஆ..உங்கள் கடவுச் சொல் வந்து விட்டது" என்றார். அது எதற்கு என்றேன். இது முக்கியம் என்று குறித்துக் கொடுத்தார். அப்பொழுது.. ​மெதுவாக, நான் உருவாக்கி வைத்திருந்த தமிழம் வலையை எடுததுக் காட்டினேன். இது சரியாகுமா என்றேன். கணினியில் இயக்கிப் பார்த்து மகிழ்ந்தார். இதையே ஏற்றி விடுகிறேன் என்றார். ஒருசில நிமிடங்களுக்குள் நான் உருவாக்கி

Imageவைத்திருந்த 3 பக்கங்களும் வலையேறின. பிறகு தமிழம்வலை என்று தட்டச்சு செய்து இயக்கினார். நான் உருவாக்கிய பக்கம் என்முன் கணினியில் தோன்றியது. வானத்தில் பறப்பது போலத் தோன்றியது. செந்திலின் கையைப் பிடித்து என் மகிழ்ச்சியைத் தெரிவித்தேன்.

நேராக நாங்கள் இருவரும் இணையதளத்​தை ஏற்பாடு செய்து தந்த அரவிந்தசாமி என்ற நண்பரைக் காணச் சென்றோம். உங்களது கடவுச் சொல்​லைக் காலையிலேயே அனுப்பி விட்டேனே என்றார். இப்பொழுது தமிழம் வலை என்று அடித்துப் பாருங்கள் என்றோம் நாம். அவரது கணினியில் தமிழம் வலை தெரிந்தது. நான் செய்ததை அறிந்து மகிழ்ந்தார். இணையத்திற்கான பல்வேறு தொழில் நுட்பங்களைச் சொல்லிக் கொடுத்தார் அவர்.

"தமிழகத்தில் தமிழ் படிக்கத் தெரியாத, தமிழ் மாணவர்கள் அதிகம். பெருகிவரும் ஆங்கிலப்பள்ளிகளால் தமிழையும் மறந்து, ஆங்கிலத்தையும் நிறைவாகப் பெறாமல் இருக்கிறார்கள் நம் மாணவர்கள். ஆங்கிலத்தை ஒரு மொழியாகக் கற்றால் அந்த மாணவன் தான் நினைப்பதை எழுதவும், பேசவும் முடியும். பிறர் எழுதியதைப் படித்துப் புரிந்து கொள்ளவும் முடியும். மொழியறிவு என்பது இதுதான். ஆனால் இன்​றைய மாணவர்கள் திரிசங்கு நிலையில் தமி​ழையும் மறந்து, ஆங்கிலத்​தையும் நி​றைவாகப் ​பெறாமல் இருக்கிறார்கள். 6, 7, 8 படிக்கும் மாணவர்களால்கூட இன்று தமிழ்ச் செய்தித்தாளைப் படிக்க முடியவில்லை"

(10) அதிகாலை : தமிழம் வலைப்பக்கங்கள் ஆங்கிலத்திலிருந்து தமிழில் கொண்டுவர யாரும் உதவினார்களா? நீங்களே வடிவமைக்க கற்றுக்கொண்டது குறித்து ​கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்களேன்?

நசன் : முதன் முதலில் நான் வடிவமைத்த இணையதளம் ஆங்கிலத்தில்தான் தெரிந்தது. அது எனக்கு மகிழ்வூட்டவில்லை. படவடிவில் வைக்கப்பட்ட தமிழ்ப் பத்திகள் வலையிறங்க நேரம் ஆகியது. பார்வையாளர்கள் காசு கொடுத்து இணைய தளத்தைப் பார்ப்பதால் இதனைத் தவிர்த்து விடுவார்கள். எனவே இணையதளம் தமிழில் தெரிய வேண்டும் என்று செந்தி​​​லைத் தொடர்ந்து நெருக்கினேன். சென்னையில் அழகி விசுவநாதன் இணையத்திற்கான எழுத்துருக்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் என்றார் அவர். அவரையும் அறிமுகப் படுத்தினார். அவ​ரைச் ​​சென்று கண்​டேன். நான் உருவாக்கிய தமிழம் வலை​யைக் கண்டு மகிழ்ந்தார்.

இ​ணையத்திற்கான எழுத்துருக்க​ளை இன்னும் ஒரு வாரத்திற்குள் உருவாக்கி

விடுவேன். அதை உங்கள் இணையத்தில் இலவசமாகவே வைத்து விடுகிறேன்

என்றார் அவர். அவரது வழிகாட்டுதலில் இணையத்தின் பக்கங்களில் பல மாற்றங்கள் செய்தேன். இணையம் தமிழில் தெரிந்தது. ​செப்டம்பர் 2003-ல் வலையேற்றிய அந்தப் பக்கம் இன்னும் இணையத்தின் archive பகுதியில் உள்ளது. (www.thamizham.net/webmag/bn1.htm) இன்றுவரை தமிழம் வலையில் வலையேற்றப்பட்ட பக்கங்கள் அனைத்தும் இணையத்தில் archive பகுதியில் உள்ளன.

(11) அதிகாலை : தமிழ் எளிதில் கற்க இணையம் வழி செய்யவேண்டும் என்ற எண்ணம் உருவானது எப்படி? இலவசமாக தரவிறக்கம் செய்து தமிழ் கற்றுப் பயன்பெறவும் வசதி செய்திருக்கிறீர்கள். இதற்கு நல்ல வரவேற்பு உள்ளதா?

நசன் : தமிழகத்தில் தமிழ் படிக்கத் தெரியாத, தமிழ் மாணவர்கள் அதிகம். பெருகிவரும் ஆங்கிலப் பள்ளிகளால் தமிழையும் மறந்து, ஆங்கிலத்தையும் நிறைவாகப் பெறாமல் இருக்கிறார்கள் நம் மாணவர்கள். ஆங்கிலத்தை ஒரு மொழியாகக் கற்றால் அந்த மாணவன், தான் நினைப்பதை எழுதவும், பேசவும் முடியும். பிறர் எழுதியதைப் படித்துப் புரிந்து கொள்ளவும் முடியும்.

Imageமொழியறிவு என்பது இதுதான். ஆனால் இன்​றைய மாணவர்கள் திரிசங்கு நிலையில் தமி​ழையும் மறந்து, ஆங்கிலத்​தையும் நி​றைவாகப் ​பெறாமல் இருக்கிறார்கள். 6, 7, 8 படிக்கும் மாணவர்களால்கூட இன்று தமிழ்ச் செய்தித்தாளைப் படிக்க முடியவில்லை. தமிழ் நாட்டில், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு இந்த நிலை! இ​தை மாற்றுவதற்கான

அணுகுமுறையை வடிவமைக்கத் தொடங்கினேன் ஐந்து ஆண்டுகள் தாய்த் தமிழ்த் தொடக்கப் பள்ளியில் இதனைச் சோதனை செய்தேன். முதல் வகுப்பு மாணவர்கள் செய்தித்தா​ளைப்படித்தனர். மேடையில் படிக்க வைத்தேன். 32 அட்டைகளுக்குள் தமிழ்ப் படித்தல் திறனை கற்பிக்க முடியும். 3 மாதங்களில் கற்றுக் கொள்வார்கள். இதனைச் செய்து காட்டினேன். ஆசிரியர்களே இல்லாத இடத்திலும் தமி​ழைக் கற்பிக்க முடியும். - தமிழ் எழுத்துகளை எழுதிக் காட்டுகிற, ஒலித்துக் காட்டுகிற - குறுவட்டினை உருவாக்கினேன். இவை அனைத்தும் இணையத்தில் இலவசமாக உள்ளன. வெளிநாட்டிலுள்ள பல நண்பர்கள் இதனை வலையிறக்கிப் பயன்படுத்துகிறார்கள். படியெடுத்துப் பிறருக்குக் கொடுக்கவும் செய்கிறார்கள்.

(12) அதிகாலை : மிகக் குறைந்த விலையில் தமிழ் கற்க தமிழம் வலையில் விற்பனை பிரிவு வைத்துள்ளீர்கள். இது ஒரு நல்ல முயற்சி. இதற்கு நல்ல வரவேற்பு உள்ளதா? அது பற்றிக் ​கொஞ்சம் ​சொல்லுங்க​ளேன்!

நசன் : இ​ணையத்தில் உள்ள விற்பனைப் பிரிவு வழியாக‌ இதுவரை யாரும் வாங்கவில்லை. இணையத்தில் இலவசமாகவே உள்ள பொழுது எதற்குக் காசு கொடுத்து வாங்க வேண்டும்?



Last update : 14-09-2008 18:52

   
Quote this article in website
Favoured
Print
Send to friend
Related articles
Save this to del.icio.us

Users' Comments  RSS feed comment
 

Average user rating

   (0 vote)

 

Display 3 of 3 comments

Nasan enum Naayahar

By: Pazhaselvaraaju () on 03-02-2009 23:49

Nasan enum Naayahar

By: Pazhaselvaraaju on 03-02-2009 23:49

I am very much happy to read Mr.Nasan,because I love those who love Thamizh.I am much proud that I have met him personally, and wondered to see his hard work.I praise him to live a long life to serve Thamizh.

 

» Report this comment to administrator

» Reply to this comment...

பொள்ளாச்சி நசனின்

By: முத்து () on 10-12-2008 11:55

பொள்ளாச்சி நசனின்

By: முத்து on 10-12-2008 11:55

பேராசிரியர ் பொள்ளாச்சி நசன் அவர்களைப் பற்றி முழுமையாகத ் தெரிந்துகொ ள்ள வாய்ப்பளித ்த அதிகாலைக்க ு நன்றி! இன்றைய கல்விமுறை பற்றிய அவருடைய கருத்துகள் நூற்றுக்கு நூறு உண்மை. அவருடைய தாய்த்தமிழ ்த் தொடக்கப்பள ்ளி மென்மேலும் வளர வாழ்த்துகள ்!

 

» Report this comment to administrator

» Reply to this comment...

interview by albert

By: Pollachi Nasan () on 09-09-2008 12:54

interview by albert

By: Pollachi Nasan on 09-09-2008 12:54

Respected Sir  
Your layout and presentation of my interview is fine. I am highly impressed by your valuable technique and hard work.  
thank you very much  
yours  
pollachi nasan

 

» Report this comment to administrator

» Reply to this comment...

Display 3 of 3 comments



Add your comment
Name
E-mail
Title  
 
Comment
 
Available characters: 600
   Notify me of follow-up comments
  Mathguard security question:
B1S          J       
F W    K    YG    DO8
L86   IGK    B       
  A    I     B    7K9
PEH         Q6Y      
   
   



mXcomment 1.0.8 © 2007-2010 - visualclinic.fr
License Creative Commons - Some rights reserved
Related news items
Newer news items
< முந்தைய
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          

உலகச் செய்திகள்

Newer news items
<< Previous Page          
உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW