|
நாளுக்கு நாள் பெருகிவரும் பெயர் தெரியா, காரணம் தெரியா நோய்களுக்கு புதிய புதிய சிகிச்சை முறைகள் வந்தாலும், முழுமையாகக் குணப்படுத்த முடியாமல் உயர்ச்சேதம், பொருட்சேதம், உறுப்புச் சேதம் போன்றவற்றைத்தான் நாம் அன்றாட வாழ்க்கையில் சந்தித்து வருகிறோம். மருத்துவம் என்பது மகத்தான சேவை என்பதை மறந்து, வருவாய் ஈட்டும் தொழிலாகவே மாறிப்போன இந்தச் சூழலில், இப்படித்தான் மருத்துவச் சேவை புரியவேண்டும் என்று விடா முயற்சியுடன் படித்து, பல்வேறு சோதனையும், ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு மருந்து, மாத்திரைகளற்ற ஓர் அற்புதமான மருத்துவ முறையான 'அக்குப்பஞ்சர்' முறையில் பல்வேறு சாதனைகளையும், சவால்களையும் செய்துகொண்டிருக்கும் பிரபல அக்குப்பஞ்சர் மருத்துவர் நாகர்கோவில் தாருல் சஃபா சாதிக் அவர்களை அதிகாலையின் சார்பாக சந்தித்தோம். அவர் அதிகாலை வாசர்களின் மருத்துவம் சார்ந்த சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் தொடர்ந்து பதிலளிப்பதாகவும் உறுதியளித்துள்ளார். அவர் நம்முடன் கலந்துரையாடியதை அதிகாலை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.
Last update : 16-06-2010 02:30
|
|
|
Users' Comments  |
|
Average user rating
(0 vote)
|
|
Add your comment
|